logo
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் தெப்ப உத்சவம்.

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் தெப்ப உத்சவம்.

11/Mar/2020 05:13:48

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் தெப்ப உத்சவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.

  ஆலங்குடி அருகிலுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் மாசிமகத்தில் நடைபெரும் திருவிழாவில், கோயில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில்,நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் காகித மாலைகளை எடுத்துவந்து குதிரை சிலைக்கு அணிவித்து வழிபட்டனர். தொடர்ந்து, கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தெப்ப உத்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியை எழுந்தருளச்செய்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தெப்ப உத்சவ விழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Top