logo
புதுக்கோட்டை கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்  திறந்து வைத்தனர்

புதுக்கோட்டை கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் திறந்து வைத்தனர்

14/May/2021 08:12:25

புதுக்கோட்டை, மே:  புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை  தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல்  காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  (14.5.2021) வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.

 

பின்னர்   சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையமான மகளிர் கல்லூரி விடுதி, மாணவர் கல்லூரி விடுதி போன்றவை பார்வையிடப்பட்டது

 

   

 இந்த மாணவர் கல்லூரி விடுதியில் 200 படுக்கைகளும், மாணவியர் கல்லூரி விடுதியில் 250 படுக்கைகளும் என மொத்தம் 450 படுக்கைகள் தயாh; செய்யப்பட்டு கோவிட் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் அதற்குரிய ஆக்ஸிஜன் வசதி அமைக்கப்படுவதுடன் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு இதன் மூலம் சம்மந்தப்பட்ட நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 பொதுமக்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டாலும் அச்சப்பட தேவை இல்லை. கோவிட் நோயாளிகளுக்கான தற்பொழுது புதிதாக துவக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவதற்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று இன்றையதினம் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையத்திலும் 75 படுக்கை வசதிகள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கோவிட் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ளதுஇம்மையத்தில் பாரம்பரிய உணவுகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. இரண்டு மருத்துவ முறைகளுடன் கோவிட் நோயாளிகளை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூhp மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கு சத்தான, தரமான உணவு வழங்கும் வகையில் ரூ.9 லட்சம் நிதி பெறப்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட எவ்வித குறைபாடுகள் இன்றி கோவிட் நோயாளிகளை கவனிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு வழங்கி வரும் ஆக்ஸிஜன் அளவிற்கு ஏற்றவாறு ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன்கள் ஓரிரு நாட்களில் பெறப்பட்டு தேவையான படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளது  என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

பின்னர் சுற்றுச்சூழல்  காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனினும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னதாகவே சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த வகையில் ரெம்டெசிவர் மருந்து தேவைப்படும் நபர்களுக்கு நாளைய தினம் நேரு ஸ்டேடியத்தில் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான இடம் அங்கு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து மருந்துகள் வாங்கி செல்வதற்கு தேவையான வசதிகள் உள்ளது. மருந்து வாங்க வரும் பொதுமக்களுக்கு எவ்வித நோய் தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நேரு ஸ்டேடியத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மருந்துகள் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனங்கள் அனைத்தையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று நைட்ரஜன் உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனங்களை கண்டறிந்து அங்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்திற்கு தேவையான அளவை விட அதிகமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து கையிருப்பில் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஸ்டர்லைட் ஆலையிலும் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது. முதல்வர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

முன்னதாக அமைச்சர்கள்  குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி,  சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வை.முத்துராஜா(புதுக்கோட்டை), எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை), கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

Top