logo
சேகர்ரெட்டியிடம் ரூ.24 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை முடித்து வைத்தது சிபிஐ நீதிமன்றம்

சேகர்ரெட்டியிடம் ரூ.24 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை முடித்து வைத்தது சிபிஐ நீதிமன்றம்

29/Sep/2020 10:30:42

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகர் ரெட்டியின்  வீட்டிலிருந்து, ரூ.24 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  முடித்து வைத்து உத்தரவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது வீட்டில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சேகர் ரெட்டி உள்பட அவரது நண்பர்கள் 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில், ரூ.24 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பானபான வழக்குகள் மட்டுமே சேகர் ரெட்டி மீது நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கை சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் சேகர் ரெட்டி உள்பட 6 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹர், சேகர்ரெட்டி உள்பட 6 பேர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது

Top