logo
ஈரோடு ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர் உதவி மையம் திறப்பு

ஈரோடு ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர் உதவி மையம் திறப்பு

01/May/2021 07:42:23

ஈரோடு, மே: ஈரோடு ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான திறக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த ஏறத்தாழ 1.25 லட்சம் தொழிலாளர்கள் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் போன்ற பகுதிகளில் தங்கி பல்வேறு ஸ்பின்னிங் மில், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

 கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட  பொது முடக்கத்தால் இத்தொழிலாளர்கள் திரளாக புலம் பெயர்ந்து தங்களது சொந்த  பிரயாணம் செய்தனர். அதில் பெரும்பாலான  தொழிலாளர்கள் கால்நடையாக பவ்வேறு இடங்களுக்கு சென்றார்கள்.

அப்போதைய பொது முடக்கத்தில் இத்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளானார்கள்கோவிட் தொற்று இரண்டாம் அலை தீவிரடைந்துள்ள  தற்போதைய சூழலில்,  பொது முடக்கம் மற்றும் நோய்தொற்று அச்சத்தினால் கடந்த இரண்டுவாரங்களாக மீண்டும்  இத்தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கிவிட்டனர்.

 ஈரோடு ரயில் நிலையத்தில்  நாள் ஒன்றுக்கு  சராசரியாக 500 பேர் வருவதும்,  தாங்கள் செல்ல வேண்டிய  ரயிலுக்காக அடுத்த நாள்வரை இங்கேயே தங்கியிப்பது  வாடிக்கையாகிவிட்டது.

 இச்சூழலில், ஈரோடு உரிமைக்கல்விக்கான மேம்பாட்டு மையம்-READ  (ரீடு) தொண்டு நிறுவனம், ஈரோடு ரயில் நிலையத்தில், புலம்பெயர் தொழிலாளர் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.

 தற்போது முன்பதிவு இல்லாமல் ரயில் பிரயாணம் செய்யமுடியாத காரணத்தால், ஹிந்தி மொழியில் பேச, படிக்க, எழுத தெரிந்த 3 தன்னார்வலர்கள் இந்த மையத்தில் இருந்து, மேற்படி தொழிலாளர்கள், முன்பதிவு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தல், ரயில் வரும், புறப்படும் நேரம் போன்ற தகவல்களை கொடுத்து உதவுகிறார்கள். மேலும், சமூக இடைவெளி, முக கவசத்தின் அவசியம், தொற்று அறிகுறி போன்ற விழிப்புணர்வும்  வழங்கப்படுகிறது.


Top