logo
  கொரோனா தொற்றுள்ள ஒரு நபர் மூலம் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

கொரோனா தொற்றுள்ள ஒரு நபர் மூலம் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

27/Apr/2021 08:08:32

 

ஒரு கொரோனா தொற்றுள்ள நபர் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம். தொற்று பாதித்த நபர் 50% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் 406 நபர்களுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.

தொற்று பாதித்த நபர் 75% சமூக இடைவெளியை பின்பற்றினால் அவர் மூலம் கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே. கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.

சமூக இடைவெளி என்பது ஒரு சமூக தடுப்பூசி மாதிரி. அனைவரும் சமூக இடைவெளியை மறக்காமல் பின்பற்ற வேண்டும் என  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                                                  

        

Top