logo
வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஈரோட்டில் 28 இடங்களில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஈரோட்டில் 28 இடங்களில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

28/Sep/2020 03:47:11

ஈரோடு: மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து அதற்குத் துணைபோகும் .தி.மு. அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு தெற்கு மாவட்ட மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் 28 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.  அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பி.கே. பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.. பிரகாஷ், தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால், முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பி.ரவி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொ..தே., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக்  உள்பட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர்,சூரம்பட்டி ,திண்டல், எல்லை மாரியம்மன் கோவில். ஆர்.என். புதூர் உள்பட பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபியில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  துணைப்பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. தலைமை வகித்தார். இதைப்போல் கொடுமுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்  வகித்தார்.அவல்பூந்துறை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்இதைப்போல் மொடக்குறிச்சி ,லக்காபுரம், அரச்சலூர் ,சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி உட்பட மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொண்டனர்

Top