logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்   பல்வேறு கோயில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடு.

14/Apr/2021 12:00:33

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில சித்திரை முதல்நாள் (பிலவ வருடம்)தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரில் தெற்கு நான்காம் வீதியிலுள்ள தண்டாயுதபாணி கோயில், பிரஹதாம் பாள்கோயில், திருவப்பூர் முத்துமாரியம்மன்கோயில், குமரமலை பாலதண்டாயு தபாணி, புவனேஸ்வரியம்மன் கோவில், சாந்தநாதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில்  கொரோனா தடுப்பு  வழிமுறைகளை களைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இதே போல்,  திருவரங்குளம் சிவன் கோயிலில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் விநாயகர், சுவாமி அம்பாள், தெட்சினாமூர்த்தி, சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, மகாலெட்சுமி, குருபகவான், கருப்பர், ஸ்ரீபிடாரி அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதைப்போல பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயில், புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலை முத்துமாரியம்மன், திருமயம் சிவன்கோயில், இலுப்பூரில் உள்ள  சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில், தரம்தூக்கி பிடாரி அம்மன்கோயில்.


இருந்திரப்பட்டி முத்துமாரி அம்மன்கோயில், அன்னவாசல் அருகே தான்றீஸ்வரம் சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமி கோயில், அன்னவாசல் தர்மசம் வர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோயில், திருவேங்கைவாசல் பிரகதம்பாள் உடனுறை வியாக்ர புரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி  சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 


Top