logo
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம்: யுவராஜா

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம்: யுவராஜா

01/Apr/2021 01:14:34

ஈரோடு, மார்ச்:  ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் எம்.யுவராஜா, இடையன்காட்டுவலசு, அரசு மருத்துவமனை பகுதி, பெரியண்ணன் வீதி, ஈ.வி.என்., சாலை பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு  வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களிடம், வேட்பாளர் எம்.யுவராஜா பேசியதாவது: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், அம்மா இல்லம் திட்டத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித் தரப்படும். குலவிளக்கு திட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம், 1,500 ரூபாய், பொங்கல் பரிசு வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு பணி, அனைத்து ரேஷன் கார்டுக் கும், இலவச சோலார் சமையல் அடுப்பு, அம்மா வாஷிங்மெஷின், ஆண்டுக்கு, 6 இலவச சிலிண்டர் வழங்கப்படும், என அறிவித்துள்ளனர்.

இதில், ஆறு காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்க முடியுமா, என கேட்கின்றனர். தற்போது ஒரு சிலிண்டர், 850 ரூபாய்க்கு வாங்குகிறோம். இதில் மத்திய அரசு மானியத்தொகையாக, 40 முதல், 80 ரூபாய் நமது வங்கி கணக்கில் செலுத்துகிறது.

மாநில அரசு மொத்தமாக கொள்முதல் செய்வதாலும், மாநில அரசு வரி நீக்கத்தால் மேலும் விலை குறையும். ஆறு சிலிண்டருக்கு 3,000 முதல், 3,500 ரூபாய்தான் அரசுக்கு செலவாகும். இத்தொகையை அரசு எளிதில் வழங்கும். சாதாரண மக்கள் இலவச சிலிண்டரால் பயன் பெறுவர். தகுதியான மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு உதவித்தொகை கிடைக்க செய்வேன்.

இத்திட்டத்தை நிறைவேற்ற, எனக்கு இரட்டை இலை சின்னத்தில்  வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு பே

Top