logo
திருமயம்    ஒன்றியத்தில்  69  கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து தீவிர வாக்கு சேகரிப்பு

திருமயம் ஒன்றியத்தில் 69 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து தீவிர வாக்கு சேகரிப்பு

30/Mar/2021 11:04:20


புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில்   திருமயம்   ஒன்றியத்துக்குள்பட்ட 69 கிராமங்களில்  அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  செவ்வாய்க்கிழமை சூறாவளி சுற்றுப்பயணம் செய்து   வாக்கு சேகரித்தார்.


 திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார். அனைத்துத் தரப்பு மக்களின் மதிப்பைப்  பெற்றுள்ள இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமயம்  தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி, அரிமளம்,  திருமயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 100 ஊராட்சி களைச் சேர்ந்த 600 -க்கும் மேற்பட்ட  கிராமங்களில்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில்,  திருமயம்   ஒன்றியத்துக்குள்பட்ட  அரங்கினான்பட்டி   கிராமத்தில்  காலை 7 மணியளவில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  பிரசாரத்தைத் தொடங்கி  கிராம மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது: 

திமுக ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை.  ஆனால்  அதிமுக அரசு கடந்த பொங்கல் பண்டிகைக்காக   ஒரு ரேஷன் கார்டுக்குரூ.2500  வழங்கியது.

 மேலும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம்  போன்ற எண்ணற்ற  நலத்திட்டங்கள் வழங்கியது. அதே போல, தற்போது நடைபெறும்   தேர்தலுக்காக அதிமுக  அறிக்கையில் கூறப்பட்டுள்ள வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், கூட்டுறவு கடன்கள் ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு   அதிமுக அரசு மீண்டும் அமையும்  வகையில் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து,  ந. புதூர், தபசுமலை, மாமரத்துப்பட்டி, செட்டியாபட்டி, மேரி நகர், வலையன்வயல், நகரத்துப்பட்டி, கொத்தமுத்துப்பட்டி, கப்பத்தான்பட்டி, லெம்பலக்குடி, பாப்பான்பட்டி, ஏனப்பட்டி, கொடிப்பட்டி, புலிவலம், சொக்கநாதபட்டி, புதுப்பட்டி, ஆண்டிபட்டி, அற்புதபுரம், தச்சம்பட்டி, வெ. கோட்டையூர், கே. கோட்டையூர், இளஞ்சாவூர்,, இருதயபுரம், மணவாளங்கரை, ஓலைக்குடிப்பட்டி, குளத்துப்பட்டி,  கண்ணனிப்பட்டி, சீமானூர், திருமயம் கடைவீதி, மேலூர்.


இளங்குடிப்பட்டி, வாரிப்பட்டி, முள்ளிப்பட்டி, சேதுராபட்டி, கீழத்துருவாசபுரம்   உள்பட  69  கிராமங்களில் ஒரே நாளில்  சுற்றுப்பயணம் செய்து அதிமுக  10 ஆண்டுகால சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதியிலுள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள்  மற்றும் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  


 


Top