logo
விளையாட்டை விளையாட்டாக  நினைக்கக்கூடாது: இலக்கிய விமர்சகர், எழுத்தாளர்  ந. முருகேசபாண்டியன்

விளையாட்டை விளையாட்டாக நினைக்கக்கூடாது: இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் ந. முருகேசபாண்டியன்

28/Mar/2021 05:50:29

புதுக்கோட்டை, மார்ச்:  விளையாட்டை விளையாட்டாக நினைக்கக்கூடாது என்றார் இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான ந. முருகேசபாண்டியன்.

புதுக்கோட்டையில் அலுவலர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேலைச்சிவபுரி கணேசர்  கலைக அறிவியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற உடற்கல்வி பேராசிரியர் முனைவர்  நா. விஜயரகுநாதன்ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராஜசரோஆகிய இருவரும் இணைந்து  எழுதிய கால்பந்து எனும்  நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது: 

விளையாட்டு மனிதனின் உடல் நலத்தையும் மன வளத்தையும் வலிமைப்படுத்தக்கூடியது, அந்தக்காலத்தில் பள்ளிக்குச்சென்று வீடு திரும்பும் குழந்தைகள் விளையாடிவிட்டு வருவதை அவர்களின் உடைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால், தற்போது, காலையில் பள்ளிக்குச்சென்று வீடு திரும்பும் குழந்தைகள்  மடிப்புக்கலையாத உடைகளைத்தான  பார்க்கமுடிகிறது. காரணம் அவர்களிடமிருந்து விளையாட்டு வெகு தூரம் விலகி நிற்கிறது.  மேலும், வீட்டுக்கு வந்தவுடன் டியுஷனுக்கு பெற்றோர்கள் அனுப்பி விடுகின்றனர்.  தெருவில் விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிற  அந்தக்குழந்தைகள் வருங்காலத்தில் பல்வேறு  நோய்களின் பாதிப்புக்கு ஆளாக வேண்டும்.  

பாரதி கூறியது போல பள்ளிக்குழந்தைகள் மட்டுமல்ல அனைவருமே ஏதாவது ஒரு விளையாட்டில்  கட்டாயம் ஈடுபட வேண்டும். அப்போதுதான் மனமும், உடலும் ஒரே நிலைக்கு வரும். இதற்கு பெற்றோர்களின் ஒத்துவைக்க வேண்டும்.

மண்ணில் விளையாடினால் பல வகை நோய்கள் வருகின்ற என்று தொலைக்காட்சியில்  ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள். அப்படியென்றால் இந்த மண்ணில் நின்று விவசாயம் செய்பவர் கள்  நோய் தாக்கும் என்று பயந்தால் இந்த உலகின் நிலைமை  என்னவாகும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது.

பணியிலிருந்து ஓய்வு பெற்றால் வாழ்க்கையே போய்விட்டது போல  பலரும் ஆகிவிடுகி றார்கள்.  ஆனால், ஓய்வுக்கு பிறகு வேறு ஒரு  மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கிறது என்பதை உணருவதில்லை. ஆனால், அதை நன்றாக உணர்ந்தால்தான் இந்நூலாசிரியர்  விஜயரகுநாத னுக்கு நிறைய தேடல்கள் இருப்பதால் தான் ஓய்வு பெற்ற 6 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு வருகிறார்.


ஓய்வு பெற்றபிறகுதான் மனிதனுக்கு  அமைதியும் புகழும் தேவை. அதற்கு நல்ல நண்பர் களின் உறுதுணையும் வழிகாட்டலும் அவசியம் . நல்ல படிப்பு வெளிநாட்டில் வேலை என்பது மட்டுமே  வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி விளையாட்டுத் துறையில் நல்ல ஊதியமும்,  உயர் பதவியையும் பெற முடியும். அதற்கு இந்நூலில் உள்ள பல வீரர்களின் வாழ்க்கை சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. எனவே விளையாட்டை விளையாட்டக எடுத்து கொள்ள வேண்டாம் அதிலும் நல்ல வாழ்க்கை இருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன்.

 விழாவுக்கு, வி. ராமு, ஏ. முத்துக்கருப்பன், கே. அம்பிகாபதி, எல். அக்னி முத்து, ஏ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கால்பந்து நூலை மன்னர் கல்லூரி முதல்வரும் பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான முனைவர் சி. திருச்செல்வம் வெளியிட்டார்.

அதை, மருத்துவர் ராமசாமி, பேராசிரியர் அண்ணாமலை, கே. பாண்டியன், ஜி.யு. அருளானந்தம், என். தாகிருஷ்ணன் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை முனைவர் கே.ஏ. ரமேஷ் தொகுத்தளித்தார்.


Top