logo
பேஸ்புக், டிவிட்டரில் கணக்கு இல்லை: அஜித் அறிக்கை.

பேஸ்புக், டிவிட்டரில் கணக்கு இல்லை: அஜித் அறிக்கை.

07/Mar/2020 07:10:06

பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தனது அதிகாரப்பூர்வ கணக்குகள் ஏதும் தொடங்கப்படவில்லை என நடிகர் அஜித்குமார் அறிக்கை வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

 அஜித்குமார் தற்போது, எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்துவருகிறார். அஜித் பொதுவாகவே, வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சமூக ஊடக கணக்குகளில் இருந்து விலகியே இருப்பவர். இந்நிலையில்,அவரது ரசிகர்கள் சிலதினங்களாக வலிமை படத்தின் தகவல்கள் குறித்து எவ்வித தகவல்களையும் தெரிவிக்காத படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், வலிமை படத்தில் அஜித் பைக் சேசிங் செய்வதுபோன்று காட்சிகள் படமாக்கப்படுவது அண்மையில் வெளியானது. இதனால், அஜித்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில்தான், மார்ச்.6-ஆம் தேதி அஜித் சமூக ஊடக கணக்குகளில் இணையப்போவதாக அறிக்கை ஒன்று வெளியானது. இதை உண்மை என நம்பிய அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

 இதை நடிகர் அஜித் மறுத்து வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அஜித்திற்கு எவ்வித சமூக ஊடகங்களிலும் அதிகாரப்பூர்வ கணக்குகள் இல்லை. சமூக ஊடகங்களில் எவ்வித கருத்துக்களையும் தான் பதிவிடுவதில்லை.பொய்யான அறிக்கையை சிலர் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Top