30/Oct/2020 04:35:42
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் ( 44). இவர் தனது நண்பர் இசக்கி குமாருடன் நேற்று ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்லும் பேருந்தகதில் ஏறினார்.குணசேகரன் அருகே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். பேருந்து புறப்பட்ட அடுத்த நிமிடம் குணசேகரன் பாக்கெட்டில் இருந்த 200 ரூபாயை அந்த மர்ம நபர்கள் திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என கூச்சலிட்டார்.
அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் சிலர் தப்பியோடிய இருவரையும் மடக்கிப் பிடித்து ஈரோடு நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் சடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (32), ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.இது குறித்து டவுன் போலீஸார்ர வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்