logo
ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..!

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..!

27/Mar/2021 07:48:52

ஈரோடு, மார்ச்:ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவது கொரோனா தடுப்பு நடவடிக்கை வெற்றி பெறுவதற்கான நல்ல அறிகுறியாகவே பார்க்க முடிவதாக சுகாராத்துறையினர் தெரிவித்தனர்.


இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.முன்கள பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த வேளையில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. 


ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே முன் களப்பணியாளர்களான அரசு, தனியார்  மருத்துவமனைகளில்  பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் பிற துறையில் பணியாற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் ஆகியோர் என 20,000 முன்கள  பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


 இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது உடைய இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 28,000 பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்தது. ஆனால் நாள் செல்லச் செல்ல தடுப்பூசி போட்டு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதுவரை நமது மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்  அனைவரும் நலமாக உள்ளனர். முதல் தடுப்பூசி பற்றிய அச்சம் மக்களிடம் இருந்தது. தற்போது அச்சம் விலகி உள்ளதாலும், மாவட்டத்தில்  மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தினமும் அரசு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 800 பேர் வரை தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். கடந்த ஒரு  வாரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்

Top