logo
ஈரோட்டில் மார்ச் மாதத்தில் 23 நாட்களில்  262  பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோட்டில் மார்ச் மாதத்தில் 23 நாட்களில் 262 பேர் கொரோனாவால் பாதிப்பு

23/Mar/2021 09:11:17

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில்  மார்ச் மாதத்தில் 23 நாட்களில்  262  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் உள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 262 பேர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை கொரோனா பாதிப்பிலிருந்து 258 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த காலகட்டத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 82ஆக உயர்ந்துள்ளது. . இது வரை 14,804 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 128 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Top