logo
திருவப்பூர்  அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

திருவப்பூர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

16/Mar/2021 09:24:08

புதுக்கோட்டை, மார்ச்:புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து, காப்புக்களையும் வைபவத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த மாரியம்மன் ஆலயங்களில் முக்கியம் வாய்ந்த தலமாகத் திகழ்வது திருவப்பூர் அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம் ஆகும்.

இங்கு ஆண்டு தோறும் மாசிப்பெருந்திருவிழா  வெகு விமரிசையாக நடைபெறும்.  முன்னதாக, தலைமைக்கோயிலான திருக்கோகர்கர்ணம் ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆலயத்தில் இருந்து வரும் உற்சவ மாரியம்மனுக்கு தினமும் ஆறுகால பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மேள, தாளத்துடன் திருவப்பூர் கோயிலுக்கு எடுத்துச்சென்று கடந்த பிப். 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து 16 நாள்களும் கோயிலில் நடைபெற்ற மண்டகப்படி நிகழ்ச்சிகளில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 9 -ம் நாள் நடைபெற்ற தோரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி மற்றும் அலகு குத்தி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியும், திரளானோர் வடம் பிடித்து தேர் இழுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இதையடுத்து, நிறைவு நாளான (16.3.2021)செவ்வாய்க்கிழமை காலையில் திருவப்பூ ரிலிருந்து திரளான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச்சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதைத் தொடர்ந்து திருக்கோகர்கர்ணம் பிரஹதம்பாள் கோயிலை வந்தடைந்த உற்சவ மாரியம்மனுக்கு காப்பு கலைத்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற திருக்கோகர்ணம் அக்கிரஹார மண்டகப்படியை யொட்டி,  அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன், வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளச் செய்தபிறகு பிரஹதாம்பாள் ஆலயத்தில் எதாஸ்தானம் செய்யப்பட்டது. 

ஏற்பாடுகளை, அக்ரஹார மண்டகப்படி அமைப்பாளர் டி. நடராஜன், பிரமாணர் சங்க நிர்வாகிள்  எம். சீனிவாசன், த. சிவராமகிருஷ்ணன்  உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Top