logo
வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்-28-இல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்-28-இல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

26/Sep/2020 05:48:31

ஈரோடு:    இந்தியா முழுவதும் 3வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக  பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.   இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் செப்டம்பர்-28 அன்று தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.


இது குறித்து, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தலைவர்   கி.வே.பொன்னையன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்(சி.பி.ஐ)  மாநிலத் துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி, தமிழக விவசாயிகள் சங்கம்(கே.சி) மாவட்டச்செயலர் சுப்பு ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: இந்தியா முழுவதும் 3வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக  பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில்,    மகாராஷ்டிர அரசு இந்த வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது.கேரள அரசு இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு விவசாயிகளையும்,உணவுப் பாதுகாப்பையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவு கொடுக்கும் இந்த சட்டங்களை தீவிரமாக ஆதரித்து வருகிறது.

தமிழக வேளாண்துறை செயலாளரைப் பயன்படுத்தி மக்களுக்கு தவறான செய்திகளை தமிழக அரசுபரப்புரை செய்து வருகிறது.   தமிழக முதல்வரும் அமைச்சர்களும் இடைவிடாமல் தவறான செய்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றனர். மத்திய அரசிற்கும்,  மாநில அரசிற்கும் விவசாயிகள் அணி திரண்டு பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடியும்,முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் செய்து வருகிற தவறான பிரசாரத்தை முறியடித்து நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கின்ற வகையில் செப்டம்பர்-28 அன்று நடை பெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர்களும், பெருந்திரளான விவசாயிகளும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.


Top