logo
  கொன்னையூர் மாரியம்மன்கோயில் பங்குனித்திருவிழாவில் அக்னி குண்டம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்

கொன்னையூர் மாரியம்மன்கோயில் பங்குனித்திருவிழாவில் அக்னி குண்டம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்

14/Mar/2021 10:55:05

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர்  அருள்மிகு முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள்   மாரியம்மனுக்கு பால்க்குடம், காவடி எடுத்து அக்னி  குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரிலுள்ள  அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா  பூச்சொரிதலுடன் சனிக்கிழமை தொடங்கியது.  இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை  அக்னி காவடி பால்குடம். அக்னிகுண்டத்தில இறங்கும்  திருவிழா நடைபெற்றது. 

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரெட்டியாபட்டி, மூலங்குடி, செம்பூதி, செவலூர், ஆலவயல், பொன்னமராவதி உள்பட பல்வேறு பகுதிகளி லிருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள்  காவடி, பால்குடம் உடம்பில் அலகு குத்தி வந்து  கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த  14 அக்னி குண்டங்களில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  அம்மனை வழிபட்டுச் சென்றனர். 

 


Top