logo
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.10 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.10 லட்சம் மோசடி

26/Sep/2020 05:32:42

ஈரோடு நாடார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனக்கு தெரிந்தவர்கள் தலைமைச் செயலகத்தில் உயர் பொறுப்பில் இருப்பதாகவும், அவர்கள் மூலம் எளிதாக  அரசு வேலை பெறலாம் என தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய ஈரோடு, பவானி, சென்னிமலை சேர்ந்தவர்கள் ராஜாவிடம் கடந்தாண்டில் தலா ரூ. 3 லட்சத்தை கொடுத்தனராம்.. இதனையடுத்து ராஜா ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் வேலை  மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் 2 பேருக்கு  ஓட்டுநர் வேலை என மொத்தம்  3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளார். ஆனால், இந்தப் பணி நியமன ஆணை ஆணை போலி என்பது தெரிய வந்ததால் பணம் கொடுத்தவர்கள் ராஜாவிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு போது,  ராஜா பணம் கொடுத்தவர்களுக்கு காசோலைகள் மற்றும் பத்திரங்கள் கொடுத்துள்ளார் .ஆனால், தொடர்ந்து பணம் வழங்காமல் அலைக்கழித்ததால்   பாதிக்கப்பட்டவர்கள்  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார்  அளித்தனர்.  இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

Top