logo
 உலக நன்மைக்காக  பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில்  ருத்ர ஹோமம், வழிபாடு

உலக நன்மைக்காக பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம், வழிபாடு

14/Mar/2021 09:43:35

புதுக்கோட்டை, மார்ச்:    புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் அருள் பாலித்துவரும் இந்துசமய அறநிலையத்துறையைச் சேர்ந்த  அருள்மிகு பொற்பனைமுனீஸ்வரர்   கோயிலில்    உலக நன்மைக்காகவும் மாசிமாத அம்மாவாசை முன்னிட்டும், கோயிலின் குடமுழுக்கை சிறப்பாக  நடந்திடவும் வேண்டி  ருத்ர ஹோமம், சிறப்பு  வழிபாடு       நடைபெற்றது.

இதையொட்டி, தியாகராஜகுருக்கள் முன்னிலையில் மங்கள இசையுடன், ருத்ர ஹோமம் கணபதி பூஜை,  கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, லட்சுமிபூஜை,  மஹா பூர்ணாஹுதி பூஜைகள் நடத்தப்பட்டன.  

 பக்தர்களிடம் ஸ்ரீ குமார் குருக்கள் அருளாசி வழங்கி பேசியதாவது:: ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் களையும் தன்னுள்ளே அடக்கி உலகத்தை படைத்தவளே அன்னை ஆதிபராசக்தி, அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தை காப்பாற்றி, இயற்கையின் சீற்றத்தை தனித்து, மழை பெய்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், அமைதியோடும் என்றென்றும் வாழ வழிசெய்யவும்.

 மேலும்  நவக்கிரக தோஷங்கள், நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு, வழக்குகள், பூர்வஜென்ம தோஷம், கன்யா தோஷம், பித்ரு தோஷம் இதனால் ஏற்படும் திருமணத்தடை, மன அமைதி குறைவு, மனச்சோர்வு, திருஷ்டி,  துஷ்ட சக்தி தோஷங்கள் மற்றும் நாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள், கருத்து வேறுபாடு ஏற்படும் தடைகள்  நீங்கிடவும், நல்ல சுகாதாரத்துடன் வாழவும்  பதவி உயர்வு, குழந்தைகள் கல்வி , உத்தியோகம், தொழில், வியாபாரம் இவையணைத்திலும்   அருள் பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன், ஆரோக்யத்துடன் வாழவும்  இத் திருக்கோயிலின் குடமுழுக்கு விரைந்து நடக்கவும் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பழனியப்பன் பூசாரி முன்னிலையில்  முனீஸ்வரருக்கு திரவியப் பொடி பால், தயிர், மஞ்சள், இளநீர்,திருநீர் சந்தனம், பஞ்சாமிர்தம்  போன்ற பூஜை பொருள்களுடன் அபிஷேகமும், கலசாபிஷேகம் 27 நட்சத்திரங்களுக்கான  அபிஷேகம் புண்ணிய தீர்த்த அபிஷேக அலங்காரத்துடன் மாக தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அருள்பிரசாதம்  வழங்கப்பட்டது. 

இதில், நடராஜகுருக்கள்,வைரவ மூர்த்த்தி குருக்கள், புதுக்கோட்டை , அறந்தாங்கி,எரிச்சி ஆலங்குடி ,திருவரங்குளம்  உள்பட     சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகைதந்து  சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை  கோயில்  பூசாரிகள்  விழாக்குழுவினர் செய்தனர்.

Top