logo
வங்கிகள் இணைப்பு காரணமாக பின்வரும் வங்கிகளின் காசோலைகள் 1.4.2021- ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வங்கிகள் இணைப்பு காரணமாக பின்வரும் வங்கிகளின் காசோலைகள் 1.4.2021- ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

12/Mar/2021 08:36:16


1. தேனா வங்கி- 2. விஜயா வங்கி-3. கார்பரேஷன் வங்கி-4. ஆந்திரா வங்கி-5. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (OBC).6. யுனைட்டட் வங்கி -7. சிண்டிகேட்  வங்கி- 8. அலகாபாத் வங்கி. ஆகிய 8 வங்கிகள் மத்திய அரசால் பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

இந்த வங்கிகள் இணைக்கப்பட்டுள்ள  வங்கிகள் விவரம்:

தேனா வங்கி, விஜயாவங்கி ஆகியவை பாங்க் ஆப் பரோடா வங்கியுடனும், காப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடனும் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் (OBC), யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டு விட்டன.

( Dena Bank - Vijaya Bank with Bank of Baroda). (Corporation Bank-Andhra Bank  with Union Bank of India).(Oriental Bank of Commerce (OBC)-United Bank  with Punjab National Bank). (Syndicate Bank with Canara Bank). (Allahabad Bank with Indian Bank).

இதில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் வேறு காசோலை, பாஸ்புக் கேட்டு பெற வேண்டும். மேலே குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை இனி யாரிடமும் பெறக்கூடாது. ஏற்கெனவே வாங்கி இருந்தால் அதை ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் மாற்றி பெற வேண்டும்.

Top