logo
பாக்யராஜ் கையில் குழந்தையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்

பாக்யராஜ் கையில் குழந்தையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்

10/Mar/2021 11:08:22

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் குழந்தையாக நடித்திருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தான். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சின்னத்திரையில் மிக அதிக அளவு வரவேற்பை பெற்ற தொடர்களில்  ஒன்றாக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் 500 எபிசோடுகளை தாண்டி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கூட்டு குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்கும் நான்கு சகோதரர்கள், வீட்டுக்கு வந்த மருமகள்களால் நடக்கும் பிரச்சனைகள், அன்பு, பாசம் என சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவரும் வகையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை இருக்கிறது.

சுஜிதா பாண்டியன் ஸ்டோர்சில் மூத்த அண்ணன் மூர்த்தியின் மனைவி தனம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. மற்ற தம்பிகளை தன் குழந்தைகள் போல பாவித்து அன்பு செலுத்தும் அண்ணி கதாபாத்திரம் அது.தனமாக நடித்து வரும் சுஜிதாவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த கதாப்பாத்திரங்களில் ஒன்றாக அது இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சீரியல் நடிகை சுஜிதாவின் குழந்தை பருவ போட்டோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் தான் சுஜிதா குழந்தையாக நடித்திருக்கிறார்.



கொஞ்சம் வளர்ந்த பின் சத்தியராஜுடன் பூவிழி வாசலிலே என்ற படத்தில்  வாய் பேசாத குழந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அந்த கைக்குழந்தை சுஜிதா தான் என்கிற தகவலும்  ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது..

அவர் குழந்தையில் இருந்தே சினிமாவில் தான் இருக்கிறார் என்பது அவரது முந்தானை முடிச்சு புகைப்படத்தையும் பூவிழிவாசலிலே புகைப்படத்தைப்  பார்க்கும் போதே தெரிய வருகிறது. சுஜிதா தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.


Top