logo
ஈரோடு ஓங்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்

ஈரோடு ஓங்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்

05/Mar/2021 05:28:26

ஈரோடு, மார்ச்: ஈரோடு ஓங்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஓங்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசியைக நடைபெறும். இதில், பெரிய பாவடியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.


நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த, மார்ச் 1-இல் பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. 2-இல் மாலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம்ம் செய்தனர். 3-ஆம் தேதி  அக்னி கபால ஊர்வலம் நடந்தது. 4-ஆம் தேதி  விளக்கு பூஜையும், ஊஞ்சல் சேவையும் நடந்து. 


வெள்ளிக்கிழமை  காலை, 6  மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காரை வாய்க்காலில் இருந்து கரகம் எடுத்து வந்த கோயில் பூசாரி ரஞ்சித் முதலில் குண்டம் இறங்கினார் அவரைத் தொடர்ந்து ஏராளமான, பக்தர்கள், பெண்கள், சிறுவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


அதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்சியும் நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தது. இரவு தெப்ப உற்சவம் நடந்தது.  சனிக்கிழமை காலை மறு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து விழா நிறைவு பெறுகிறது

Top