logo
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: பறிமுதல் அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராதால் விற்பனையில் சரிவு

தேர்தல் நடத்தை விதிகள் அமல்: பறிமுதல் அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராதால் விற்பனையில் சரிவு

02/Mar/2021 07:38:17

ஈரோடு, மார்ச்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் ஆங்காங்கே  சரக்குகள் பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சுறுத்தல் காரணமாக  ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஜவுளி விற்பனையில் சரிவு ஏற்பட்டதாக  வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ரூ. 50 ஆயிரத்துக்கு மேல்  பணம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நாளொன்றுக்கு கோடிகணக்கில் வியாபாரிகள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தலை ஒட்டி விதிமுறைகள் அமலில் உள்ளதால் வியாபாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜவுளி சந்தை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரம், பீகார் போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் இங்கு வந்து ஜவுளிகளை  கொள்முதல் செய்வார்கள். தொழில் சந்தையில் வழக்கமான நாளன்று ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். பண்டிகை விசேஷ காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். 

இந்நிலையில்  சந்தை வியாபாரி கூறியது.  தற்போது மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திங்கள்கிளமை  நடந்த சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு வந்தால் சிக்கலில் மாட்டி விடுவோம் என்று கருதியும், தயக்கமும் காரணமாக வரவில்லை. இதனால் இன்று நடந்த ஜவுளி சந்தை வெளிமாநில வியாபாரிகள் வெறிச்சோடி காணப்பட்டது.இதனால் வியாபாரமும் மந்தமாகவே நடைபெற்றது.

Top