logo
பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்தத்தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்தத்தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்

22/Feb/2021 08:02:02

புதுக்கோட்டை, பிப்:   ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி 380 வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர்  மாவட்ட ஆட்சியரிடம் குடியுரிமை சான்றுகளை  ஒப்படைக்கும்  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வாரியத்தில் சுமார் 8,500 பேர் உற்பத்தி மற்றும் பகிர்மான பிரிவுகளில் ஒப்பந்த பணியாளர்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்களாக பணி புரியும் இவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் மேலும் தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே உள்ள  ரவுண்டானாவில்  தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது ரேஷன் கார்டு.ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவனங்களை  மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த பணியாளர்கள் கலந்துகொண்டு  முழக்கமிட்டனர்.

Top