logo
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா:பால்குடம், அலகு குத்தி  நேர்த்திக்கடனை செலுத்திய  பக்தர்கள்

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா:பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்

21/Feb/2021 10:28:26

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை,   திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா  பூச்சொரிதலுடன் 16 நாள்கள்  விமரிசையாக  நடைபெறும்.

நடப்பாண்டுக்கான  பூச்சொரிதலுடன் மாசித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையடுத்து காப்புக்கட்டுதலுடன் 16 நாள்கள் திருவிழாவும் அதன் முக்கிய நிகழ்வான  தேரோட்டமும்  நடைபெறுகிறது.  இதையொட்டி  ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


இதையொட்டி புதுக்கோட்டை மற்றும்  பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள்  விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனை  நிறைவேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல திரளான பக்தர்கள் அலகு குத்தியும், மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர்.


Top