logo
வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு  செய்யலாம்: புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்: புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

11/Feb/2021 11:43:45

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்  வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: 2020-21 -ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கு வேளாண் பயிர்களில் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, எள், கரும்பு ஆகிய  6 வகைப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் வாழை, மரவள்ளி ஆகிய 2 வகைப் பயிர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காப்பீடு செய்யலாம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களுக்கு  காப்பீடு செய்ய பின்வரும் தேதிகள் இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பயிர்களான  நெல் (நவரை) பயிருக்கு காப்பீடு செய்ய இறுதி நாள் 1.3.2021.  மக்காச்சோளம் - l l l -இ நிலக்கடலை, உளுந்து, எள் ஆகிய பயிர்களுக்கு 15.2.2021. கரும்பிற்கு 31.10.2021 மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளிக்கு பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் 1.3.2021 ஆகும். 

மேற்கூறிய பயிர்களில் வேளாண் பயிர்களான நெல் நவரைக்கு - 56 வருவாய் கிராமங்களும், மக்காச்சோளத்திற்கு 18 பிர்காக்களும், நிலக்கடலைக்கு 24 பிர்காக்களும், உளுந்துக்கு 13 பிர்காக்களும், எள் பயிருக்கு 17 பிர்காக்களும், கரும்பு பயிருக்கு 30 பிர்காக்களும், தோட்டக்கலை பயிர்களான வாழைக்கு 9 பிர்காக்களும், மரவள்ளிக்கு 2 பிர்காக்களும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த திட்டத்தில் கடன்பெறும் விவசாயிகள் அவர;கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.  கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

  எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாது. மேலும் பயிர் வாரியாக அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களான நெல் (நவரை) ரூ. 458, மக்காச்சோளம் -l l l ரூ. 360, நிலக்கடலை ரூ.373, உளுந்து ரூ.249, எள் ரூ.108, கரும்பு ரூ.2600-ம், தோட்டக்கலை பயிர்களான வாழை ரூ.2500, மரவள்ளி ரூ.725-ம் பிரீமியத் தொகையாகும்.

 இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகலை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்கூட்டுறவு சங்கங்களில் பெற்று கொள்ளலாம்.   

 எனவே, தற்போது நிலவிவரும் வானிலையால் பூச்சிநோய் தாக்குதலினால் பயிர்களில் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். 

Top