09/Feb/2021 11:49:24
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததாக அதன் கதாநாயகன் தனுஷ் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கர்ணன் குரலைக் கேட்பீர்கள் என்று புகைப்படத்தை இணைத்துள்ளார் தனுஷ்.