logo
நெல் வரப்பில் பயறு பயிரிட்டால் பூச்சி நோய் தாக்குதல் குறைய வாய்ப்பு- வேளாண்துறை யோசனை

நெல் வரப்பில் பயறு பயிரிட்டால் பூச்சி நோய் தாக்குதல் குறைய வாய்ப்பு- வேளாண்துறை யோசனை

24/Sep/2020 05:32:30

நெல் சாகுபடி செய்யும் வயலின் ஓரங்களில் உள்ள வரப்பில் உளுந்து, தட்டைப் பயறு போன்ற பயறு வகைகளை பயரிட்டால் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது பருவமழை பெய்துள்ளதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வரப்பில் துவரை, உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறு வகைப் பயிh;களை சாகுபடி செய்து பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி பயனடையலாம். நெல் சாகுபடி மேற்கொள்ளும் வயலின் வரப்பில் ஒரு எக்டருக்கு 3 கிலோ உளுந்து அல்லது தட்டைப் பயறு விதைகளை வரப்பின் ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் விதைக்கலாம். துவரை விதைகளை வரப்பின் ஓரத்தில் விதைக்கலாம். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் எக்டருக்கு 3 கிலோ பயறு விதை ரூ.150 அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த அளவு மானியத்தில் வழங்கப்படுகிறது. பயறு வகைப் பயிர்களை வரப்பில் விதைப்பதால் அவற்றை நோக்கி கவரப்படும் பொறிவண்டு போன்ற நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி, நெற்பயிரைச் சேதப்படுத்தும் தத்துப் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை தாக்கி கட்டுப்படுத்தும். பயறு உற்பத்தி அதிகமாகி சாகுபடிச் செலவின்றி மகசூல் கிடைக்கிறது. அவற்றின் தழைகள் ஆடு,மாடுகளுக்குச் சிறந்த புரதச்சத்து மிகுந்த தீவனமாகவும் பயன்படும்.

                                                                               

        


Top