logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,48,964 வாக்காளர்கள்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,48,964 வாக்காளர்கள்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

21/Jan/2021 01:30:37

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத்திருத்தம்-2021-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை 20.01.2021(புதன்கிழமை) வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத் திருத்தம்-2021-க்கான இறுதி வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6,65,376 ஆண் வாக்காளர்கள், 6,83,516 பெண் வாக்காளர்கள் மற்றும் 72 மூன்றாம் பாலினத்தவர்கள்உள்பட மொத்தம் 13,48,964 வாக்காளர்கள் 2021-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


2021-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் (16.11.2020-ன்படி) மொத்தம் 13,10,068 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்ற 2021-ஆம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின்போது 24,384 ஆண் வாக்காளர்கள், 28,728 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 53,124 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்..

16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்ற 2021-ஆம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின் போது 7,781 ஆண் வாக்காளர்கள், 6,443 பெண் வாக்காளர்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 14,228 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின் போது மொத்தம் 6,375 வாக்காளர்கள் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின் போது மொத்தம் 3,019 வாக்காளர்கள் ஒரே தொகுதிக்குள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

2021 -ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 33,200 வாக்காளர்கள்  வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி.. 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன்,  வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் டி.. ஆபிரஹாம் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக  கள ஆய்வு செய்தபின் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

 

Top