13/Jan/2021 01:14:58
புதுக்கோட்டை-ஜன: மார்கழி மாத நிறைவடைவதையொட்டி புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி நிறைவு சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பள்ளிஎழுச்சி நிறைவு சிறப்பு வழிபாடு: புதுக்கோட்டையில்மேலராஜ வீதிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் உற்சவருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மற்றும் சந்தனக்காப்பு மலர் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று மார்கழி மாத நிறைவையொட்டி திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், குமரமலை தண்டாயுதபாணி பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில், திருவப்பூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்கோயில், திருக்கோகர்ணம் ஸ்ரீபிரகதம்பாள் கோயில்,மேலராஜவீதிலுள்ள அருள்மிகு காமாட்சிஅம்மன் திருக்கோயில், சாந்தநாதர் சுவாமி கோயில், அரியநாச்சி அம்மன், ஷண்முகா நகரிலுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி நிறைவு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டைமேலராஜ விதிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் நடைபெற்ற மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிறைவு வழிபாட்டில், உற்சவருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனக்காப்பு மலர் அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது. விநாயகர் வெள்ளிக்காப்பு அலங்காரத்திலும் அருகிலுள்ள அருள்மிகு காமாட்சிஅம்மன் திருக்கோயிலில் காமாட்சி அம்மன் சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.