logo
தமிழகத்தில் வருகின்ற 16-ஆம் தேதி 307 இடங்களில் கொரோனா  தடுப்பு வேக்சின் ஊசி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் வருகின்ற 16-ஆம் தேதி 307 இடங்களில் கொரோனா தடுப்பு வேக்சின் ஊசி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

12/Jan/2021 07:53:19

புதுக்கோட்டை-ஜன: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது:  அரசின் தீவிர நடவடிக் கைகளால் தமிழகத்தில் கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக 1,000-த்திற்கு குறைந்து தற்பொழுது 800-க்கும் கீழ்  வந்துள்ளது. பிரதமர் மோடி  இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கெனவே தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலுடன்  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்அடிப்படையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வருகின்ற 16-ஆம் தேதி கொரோனா வேக்சின் தடுப்பு ஊசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் திட்டத்தை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொடங்கி  வைக்க உள்ளார்.

 மத்திய அரசிடமிருந்து இன்றையதினம் 5,36,550 கோவிசீட் வேக்சின் மருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளது. இந்த வேக்சின் 10 மண்டல மையங்களுக்கு  வழங்கப்படும்.

 இம்மையங்களிலிருந்து உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேக்சின் அனுப்பி வைக்கப்பட்டு உhpய முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற 16ம் தேதி வழங்கப்படும். 

இதேபோன்று கோ வேக்சின் 20,000 எண்ணிக்கையில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மருந்து விரைவில் தமிழகத்திற்கு வந்து சேரும். இத்துடன் சோ;த்து தமிழகத்திற்கு மொத்தம் 5,56,550 வேக்சின் மத்திய அரசின் சாh;பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 16-ஆம் தேதி வேக்சின் தடுப்பு ஊசி திட்டம் தொடங்கும்பொழுது 307 இடங்கள் குறித்த தகவல்கள் மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 307 இடங்களில் வேக்சின் தடுப்பு ஊசி போட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் விதிமுறைகளின்படி மருத்துவப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என மொத்தம் 6 லட்சம் நபர்கள் கண்டறியப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் பணி 16-ஆம் தேதி தொடங்கும். இதில் முதற்கட்டமாக 307 மையங்களில் தடுப்பு ஊசி வழங்கப்படும். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசி எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்துள்ளார். 

வெளிநாடான இங்கிலாந்தில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  தற்போது கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளதால்  ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் இந்நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை உள்ளன என்று ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் 1.45 கோடி எண்ணிக்கைக்கு மேல் ஆர்.டி.பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தாக்கம் அதிகரித்த காலத்தில் தமிழக முதல்வர் நேரடியாக களத்திற்கு சென்று மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், முன்களப் பணியாளர்கள் போன்றவர்களுடன் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று கூடுதலாக கொரோனா வேக்சின் தடுப்பு மருந்தும் பெறப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது. கொரோனா வேக்சின் தடுப்பு ஊசி பல்வேறு கட்ட ஆய்விற்கு பின்னரே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த ஆய்வில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே கொரோனா தடுப்பு ஊசி முழுவதும் பாதுகாப்பானது.  எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது. பல்வேறு வகையான ஆய்வுகளுக்குப்பின் நல்ல முடிவு வந்த பின்னரே இந்த தடுப்பு மருந்து முன்களப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தடுப்புஊசி 100 சதவீதம் பாதுகாப்பானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போட்ட பிறகு மத்திய அரசு வழிமுறைகளின்படி பொதுமக்களுக்கு படிப்படியாக தடுப்பு ஊசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தடுப்பு ஊசி புதிய வகை கொரோனா வைரஸுக்கும் எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கொரோனா தடுப்புஊசி குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.


Top