logo
விராலிமலை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்  மாடுபிடி வீரர்களுக்கு RT-PCR  பரிசோதனை: ஆட்சியர் தகவல்

விராலிமலை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு RT-PCR பரிசோதனை: ஆட்சியர் தகவல்

11/Jan/2021 11:24:07

புதுக்கோட்டை-ஜன:  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள மாடுபிடி வீரர்களுக்கு RT-PCR  பரிசோதனை  விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, விராலிமலை கிராமம், அம்மன்குளம் திடலில் வருகின்ற 17.1.2021 -இல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்களுக்கான பதிவும், காளைகளுக்கான பதிவும் மற்றும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படவுள்ள காளைகளின் உரிமையாளர்கள்,  உதவியாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆகியோருக்கு மருத்துவ தகுதி,   RT-PCR   பரிசோதனை ஆகியவை நடத்தப்படவுள்ளது. 

இதன்படி விராலிமலை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 13.01.2021 மற்றும் 14.01.2021 ஆகிய நாட்களில் மாடுபிடி வீரா;கள் பதிவு, காளைகள் பதிவு மற்றும்  RT-PCR  பரிசோதனை ஆகியவை நடைபெற உள்ளது. மேலும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பதிவின் போது ஆதார் அட்டை மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். 

மேற்கண்ட இடங்கள் தவிர அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையங்களில் RT-PCR  பரிசோதனை செய்து, தகுதிச்சான்று பெறுபவகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.  

பாh;வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், உதவியாளர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியினை கடைபிடித்தும், அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்திட போதிய ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும். 

Top