logo
உதயநிதி ஸ்டாலின் கைது: புதுக்கோட்டையில் சாலை  மறியலில் திமுக எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது: புதுக்கோட்டையில் சாலை மறியலில் திமுக எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கைது

20/Nov/2020 11:28:16

புதுக்கோட்டை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட  செயலாளரும் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்அரசு தலைமையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக எடப்பாடி அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து பஸ் நிலையம் அருகில்  மறியல்  போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில்,  திமுக நகரச் செயலாளர் க.நைனாமுகமது,மாவட்ட  நிர்வாகிகள் ஆ.செந்தில்,பெ.ராஜேஸ்வரி,மாநில நிர்வாகிகள் த.சந்திரசேகரன்,சுப.சரவணன்,புதுகை விஜயா, நகர துணைச்செயலாளர் சி.மதியழகன்,அணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,  மணிமொழி மனோகரன், சாத்தையா,கமலா செல்வம்,  வேலுச்சாமி, வை.நடராஜன், சித.ராஜா, கலைஞர்.மு.கருணாநிதி,கண்ணன், ராஜேந்திரன்,குமார், வட்ட செயலாளர்கள் கண்மணி சுப்பு, விஜயகுமார் ,ராஜதுரை, காதர் கனி, தனபால்.

இளங்கோ, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், எஸ்ஆர்வி ராஜா கே எம் எஸ் குமார், டாக்டர் முத்துக்கருப்பன்,தினகரன்அரசு, செல்லையா, இளங்கோ, சேட்டு (எ) ஜாஜகான் ,ஆசாத்,நகர இளைஞரணி ஹரி,சரத், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

இதைப்போல  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆலங்குடி எம்எல்ஏ சிவ. வீ. மெய்யநாதன் உள்பட 40 -க்கும் மேற்பட்டோரை போலீஸார்  கைத செய்தனர்.

Top