logo
ஈரோடு வ .உ .சி பூங்கா ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழா: கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி

ஈரோடு வ .உ .சி பூங்கா ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழா: கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி

11/Jan/2021 08:33:26

ஈரோடு, ஜன: ஈரோடு  வ .உ. சி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டும் தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசசையாத  நடைபெறுவது வழக்கம். அனுமன் ஜெயந்தி நாளில் ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை சார்த்தப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபடுவார்கள். இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்படும்.

இந்த ஆண்டில்  கொரோனா  பரவல் காரணமாக விழா நடத்துவது தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில்,  12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா பல்வேறு  கட்டுப்பாடுகளுடன்  நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது. அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வுகளில் 50 முதல் 100 பேருக்கு மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். அன்னதானம், திருவீதி உலா, தேர் இழுத்தல் ,வியாபார கடை அமைத்து, பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை..

இதையடுத்து  நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா  கணபதிக்கு அபிஷேகமும், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், 5 மணிக்கு மலர் அலங்காரம், மதியம் 1.30  மணிக்கு வடை மாலை சாத்துதல், மாலை 5 மணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கோயில் செயல் அலுவலர் கீதா தெரிவித்தார்.

Top