logo
அனைத்து பாவடி நிலங்களுக்கும் பட்டா வழங்க கோரி தமிழக முதல்வரிடம் செங்குந்த மகாஜன சங்கம்  மனு

அனைத்து பாவடி நிலங்களுக்கும் பட்டா வழங்க கோரி தமிழக முதல்வரிடம் செங்குந்த மகாஜன சங்கம் மனு

10/Jan/2021 06:46:23

ஈரோடு-ஜன: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 30 சதவீதம் வாக்காளர்கள் செங்குந்தர் கைக்கோள் முதலியார் சமுகத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் மற்றும் மாநில அளவில் செங்குந்தர் முதலியார் சமுகத்திற்கு சட்டசபையில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். செங்குந்த முதலியார்கள் சமுகத்திற்கு பாத்தியப்பட்ட பாவடிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஆக்கிரமிப்பு மற்றும் வருவாய்த்துறை பதிவேடுகளில் புறம்போக்கு என பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை களையும் விதமாக, செங்குந்தர் கைக்கோளர் முதலியார்கள் அனுபவத்தில் உள்ள அனைத்து பாவடி நிலங்களுக்கும் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில், அவருக்கு மணி மண்டபம் அமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல், செங்குந்தர் குல முன்னோர் கெட்டி முதலியார் ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் அவரது காலக்கட்டத்தில் பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தும், பல ஏரிகள் கட்டி விவசாயம் செழித்தோங்க செய்தும், மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளார். அவரது நினைவினை போற்றும் விதமாக அவருக்கும் மணி மண்டபம் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Top