logo
சென்னிமலை முருகன் கோயிலில் நிகழாண்டுக்கான  தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ரத்து.

சென்னிமலை முருகன் கோயிலில் நிகழாண்டுக்கான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ரத்து.

09/Jan/2021 07:35:42

ஈரோடு ஜன: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 2021-ஆம் ஆண்டுக்கான தைப்பூச தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமி அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத் தேர் திருவிழா.சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச தேரோட்டம் வருகிற 28-1-2021 -ஆம் தேதி  நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்:

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் 2021-ஆம் ஆண்டிற்கான தைப்பூச தேர்த்திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 8-1-2021 -இல்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு ஆர்.டி.ஓ  சைபுதீன் தலைமை வகித்தார். ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் .அன்னக்கொடி, பெருந்துறை வட்டாட்சியர்  முத்துக்கிருஷ்ணன், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னிமலை முருகன் கோவிலுக்கு உட்பட்ட 4 நாட்டுக்கவுண்டர்கள் மற்றும் அனைத்து மட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு (9-1-2020)சனிக்கிழமை  வெளியிடப்பட்டது.

தைப்பூசத்தை முன்னிட்டு.ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி 14 நாட்கள்  பல்வேறு சமூகத்தினரின் மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகள், சாமி அலங்காரம் மற்றும் திருவீதி உலா காட்சி ஆகியவை அந்தந்த கட்டளைதாரர்கள் மூலம் நடைபெறும். கோயில் நிர்வாகம் சார்பில் மண்டப கட்டளை நிகழ்ச்சிகள்.ஆனால் இந்த ஆண்டு மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகள் அனைத்தும் மண்டபக் கட்டளைதாரர்கள் முன்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மட்டுமே நடைபெறும்.

இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே  அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம் முருகப்பெருமானின் திருவீதி உலா காட்சி எதுவும் நடைபெறாது. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருதல், அலகு குத்தி வருதல் போன்ற எந்த ஒரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லை.

கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி அலங்காரம்:

தைப்பூச நாளான 28-1-2021 மற்றும் மகா தரிசன நாளான 1-2-2021 ஆகிய இரு நாட்களும் வழக்கம்போல் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

பூஜை பொருட்கள் கொண்டு செல்ல தடை.ஏற்கனவே அறிவித்த அரசு உத்தரவின்படி தேங்காய், பழம், பூ, மாலை போன்ற பூஜை பொருட்கள் எதுவும் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.அதேபோல் பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கும் அனுமதி இல்லை.இரு நாட்கள் வாகனங்கள் செல்ல தடை.மேலும் வருகிற 28-1-2021 (வியாழக்கிழமை) மற்றும் 29-1-2021 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு நாட்களும் மலைப்பாதை வழியாக தனியார் கார், வேன் போன்ற வாகனங்கள் எதுவும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக கடைகளுக்கு அனுமதி இல்லை:

அதேபோல் தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னிமலை பேரூராட்சி பகுதியில் பொம்மை கடைகள், பாத்திரக் கடைகள் போன்ற எந்த ஒரு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், ராட்டினங்கள் போன்ற பொழுதுபோக்கு பொருட்காட்சிகள் அமைப்பதற்கும் அனுமதி இல்லை.பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வரவேண்டும்.

பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஈ பாஸ் முறை கொண்டு வரவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஈ பாஸ் முறை கொண்டு வரவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Top