logo
மாவட்ட விளையாட்டரங்கில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு  அரசின்  வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட விளையாட்டரங்கில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

23/Sep/2020 01:53:08

 புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உடற்பயிற்சி செய்பவா;களுக்கு தமிழக அரசு வழிகாட்டு  நெறிமுறைகளை அறிவித்துள்ளதாக  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.

          இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட விளையாட்டரங்கத்தில் விளையாட்டு பயிற்சி மற்றும் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம்.  மைதான நுழைவு வாயிலில் கை கழுவ கிருமி நாசியின்  மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.    விளையாட்டு மைதானத்திற்குள் நுழையும்போதே பொதுமக்கள், வீரர், வீராங்கனைகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும்.  ஒவ்வொரு மைதானத்திலும் சமூக இடைவெளியுடன் 100 பேருக்கு மேல் மிகாமல் இருத்தல் வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு  கண்டிப்பாக அனுமதி கிடையாது.     விளையாட்டு மைதானத்திற்குள் வருபவர்கள் பாட்டிலில் குடிதண்ணீர் கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணிகள் 10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் உடற்பயிற்சி செய்ய விளையாட்டு மைதானத்திற்குள் அனுமதி கிடையாது.


Top