logo
6 ஆண்டுகள் கடந்தாலும்  நினைவிலிருந்து நீங்க மறுக்கும் சுனாமி பேரழிவு

6 ஆண்டுகள் கடந்தாலும் நினைவிலிருந்து நீங்க மறுக்கும் சுனாமி பேரழிவு

29/Dec/2020 11:14:19

சென்னை: சுனாமி தாக்குதலின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.

தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமாரி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள், என்னவென்று சுதாரிப்பதற்குள் பல்லாயிரக்கணக்கானோரை வாரி சுருட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றது.

ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவுகளையும், உடைமைகளையும் ஒருசேர பறித்துச்சென்ற அந்த கோர தாண்டவம் இன்னமும் அனைவரின் நினைவில் இருந்தும் நீங்க மறுக்கிறது. இதை ஒட்டி இன்று தமிழகம் முழுவதும் 16-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

தன் கோரப் பசிக்கு லட்சக்கணக்கான உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி வாரி சுருட்டிக் கொண்ட சுனாமி, பலரை நடுரோட்டில் நிர்க்கதியாக நிற்கவைத்த துயரத்தைம், உறவுகளையும், உடைமைகளையும் பறிகொடுத்து அடுத்தவேளை உணவுக்காக கண்ணீருடனும், கவலை தோய்ந்த முகங்களுடன் மக்களை நிர்கவைத்ததை இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கிறது.

அந்த சுனாமியால் இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான். கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் எளிதில் மறக்க முடியாது. நாகை மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டன. சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அந்த கொடும் சோகத்தின் வெளிப்பாடாகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கடலில் பூக்கள் தூவி, பால் ஊற்றதி.மு.க.ப்படும். சுனாமியில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவார்கள்.

சென்னை காசிமேட்டில் சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி மற்றும் அமைதி பேரணி அ.தி.மு.க. சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்திற்கு மதுசூதனன் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் இன்று விழுப்புரம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடலூர் துறைமுகத்தில் மீனவர்கள் கண்ணீர் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரியில் உள்ள மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெற்றது. மரக்காணம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


Top