logo
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு புதுக்கோட்டையில் அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு புதுக்கோட்டையில் அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

29/Dec/2020 10:55:11

புதுக்கோட்டை:   புதுக்கோட்டைமேல ராஜ  வீதியிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  சனீஸ்வரர் பெயர்ச்சியை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 இதையொட்டி சிவ ஸ்ரீ பாலா ஸ்ரீ  ஈசாண  சிவாச்சாரியார் தலைமையில்  சனீஸ்வரர் பெயர்ச்சி  சிறப்பு ஹோமம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.  சனீஸ்வரருக்கு  பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம்  மற்றும் தீபாராதனை  நடந்தது.சனீஸ்வரர் பகவான்   மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். 

 ஆலயத்தில் தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடந்தது.    திரளான  பக்தர்கள் வருகைதந்து   வழிபட்டனர். ஏற்பாடுகளை  கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.         

Top