logo
 அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

07/Dec/2020 07:47:03

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்துக்கு  தகுதியுள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: 2020 - 21 -ஆம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மகளிர் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்த 23.11.2020 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 ஆனால் இதுவரை உள்ளாட்சி அமைப்பு வாரியாக போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆகவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பணிபுரியும் அல்லது சுயதொழில் செய்யும் மகளிர் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

Top