logo
 பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கானஇடஒதுக்கீட்டை தமிழகத்தில்  நிறைவேற்ற  பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கானஇடஒதுக்கீட்டை தமிழகத்தில் நிறைவேற்ற பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

29/Dec/2020 10:26:49

ஈரோடு, டிச:   பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் விரைவில்  நிறைவேற்ற வேண்டுமென   பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ரோட்டில்  மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

மேலும்,, மத்திய அரசு அறிவித்து உள்ள முற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் விரைவில் நிறைவேற்ற வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். 

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைபோல பொருளாதார ரீதியாக நலிந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பிராமண சமுதாயத்தினரின் முன்னேற்றத்துக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். இந்துக்களின் மத உணர்வை இழிவுபடுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பிராமண சமூகத்துக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில செயலாளர் கணேசன், பொருளாளர் சங்கரராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக , எம்.என்.சத்தியமூர்த்தி, வி.சுந்தரராஜன் ஆகியோருக்கு ஆன்மிக காவலர் விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. 


Top