logo
சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால் நோட்டாவுக்கே வாக்கு: ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம்  அறிவிப்பு

சங்கம் அமைக்க அனுமதிக்காவிட்டால் நோட்டாவுக்கே வாக்கு: ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் அறிவிப்பு

28/Dec/2020 08:57:01

  ஈரோடு- டிச: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் நோட்டாவுக்கு  வாக்களிக்கப் போவதாக  ஈரோடு மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் சார்பில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களிப்பது. தமிழகம் முழுவதும் காவலர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து நோட்டாவிற்கு வாக்களிக்க வலியுறுத்துவது, எதிர் காலத்தில் ஓய்வு பெற்ற நேர்மையான அரசு அதிகாரிகளை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற டி.எஸ்.பி கலியமூர்த்தி செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்யில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். 75 ஆயிரம் ஓய்வு பெற்றவர்கள் உள்ளனர்.

இந்த 2 லட்சம் பேரின் குடும்பங்களை ஒருங்கிணைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடி வாக்குகளை   நோட்டாவிற்கு பதிவு செய்வோம் என்றார். இதேபோல் தமிழகத்தில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 44  லட்சத்து 68 ஆயிரம் பேர் உள்ளதாகவும் இவர்களை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Top