logo
அனுமதியின்றி ரேக்ளா, மஞ்சுவிரட்டு, வடமாடு, ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை நடத்தினால் கடும் நடவடிக்கை: புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி. எச்சரிக்கை

அனுமதியின்றி ரேக்ளா, மஞ்சுவிரட்டு, வடமாடு, ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை நடத்தினால் கடும் நடவடிக்கை: புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி. எச்சரிக்கை

23/Sep/2020 09:42:00

புதுக்கோட்டைமாவட்டம்,கீரனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பூர், கடம்பகுளம் அருகே கடந்த 20.09.2020- அன்று குமரப்பட்டி திருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரா. கமல்ராஜ்(33),  வே. கார்த்திக்,வே. முருகேசன், மூ.சதீஷ்குமார்,  மூ.அர்ச்சுணன்(52) உள்பட மற்றும் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒன்று கூடி,கையில் கம்புடன் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவிதபாதுகாப்புமின்றியும்,அரசுஅனுமதிபெறாமலும் சட்டவிரோதமாக ஜல்லிக்கட்டு நடத்தி,மாடுகளை துன்புறுத்தியமைக்காக வீரக்குடி கிராமநிர்வாகஅலுவலர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர்  காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் வெளியிட்ட அறிவிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி ஜல்லிக்கட்டு,வடமாடு,மஞ்சுவிரட்டு,சேவல்சண்டை,ரேக்ளா ரேஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால்,சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 


Top