logo
பரவும் புதிய வகை கொரோனா கட்டுப்பாடுகள் விதித்த இங்கிலாந்து

பரவும் புதிய வகை கொரோனா கட்டுப்பாடுகள் விதித்த இங்கிலாந்து

21/Dec/2020 07:19:03

இங்கிலாந்து, டிச: இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தலைநகர் லண்டனில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில்  கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் அவற்றை நேரடியாக மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளன. ஆனாலும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்த நிலையில், பலி எண்ணிக்கையும் 67 ஆயிரத்தை கடந்துள்ளது.இந்நிலையில் மாறுபட்ட குணங்களுடன் புதிய கொரோனா தொற்று இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன், தென்கிழக்கு, கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.

அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றும், அத்தியாவசியமற்ற கடைகள், உள் அரங்க உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றார்.

இந்த தடை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். கூடுமானவரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.அதில், நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் இக்கட்டான நேரத்தில்ஒரு பிரதமராக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது எனது கடமை.

புதிய தொற்று அதிகபாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாம் ஏற்கனவே திட்டமிட்டப்படி கிறிஸ்துமஸை கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதியகொரோனா தொற்று பரவுவாக வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Top