logo
கழிவு நீரை கால்வாயில் கொட்டும் தனியார் செப்டிக் டேங்க் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

கழிவு நீரை கால்வாயில் கொட்டும் தனியார் செப்டிக் டேங்க் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

20/Dec/2020 10:38:40

மதுரை: மதுரை மாவட்டம் மாநகராட்சி மண்டல அலுவலகம் 1 எதிரே உள்ள வார்டு நம்பர் 14. மாப்பாளையம் சாலை ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகம் ஒட்டி உள்ள கால்வாயில் தனியார் கழிவுநீர் இயக்கும் லாரிகள் தொடர்ச்சியாக மாறி மாறி செப்டிக் டாங்கில் லாரிகள் செப்டிக் டேங்க் கழிவுகளை வாய்க்காலில் கொட்டி சொல்கின்றனராம். இதனால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது .

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஆணையாளர், சம்பந்தப்பட்ட தனியார் கழிவுநீர் வாகனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் .

மேலும், இந்த நிகழ்வினை, புகைப்படம் எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளையும் பொதுமக்களை மிரட்டும் தோணியில் ஓட்டுனர் பேசியதாகவும் கூறப்படுகிறது.


Top