logo
மகாத்மா காந்தி அரை ஆடைக்கு மாறிய நாள் இன்று..

மகாத்மா காந்தி அரை ஆடைக்கு மாறிய நாள் இன்று..

22/Sep/2020 08:04:32

 மகாத்மா காந்தி  1921,செப்டம்பர் 22-ஆம் நாள் மதுரையில் தனது பாரம்பரிய உடை அணிதலை  விட்டு, இடுப்பில் ஒரு வேஷ்டியும், மேலே ஒரு துண்டும், பின்னாளில் வின்ஸ்டன் சர்ச்சில் அரை நிர்வாண பக்கிரி"( half-naked fakir) என்று விமர்சித்த அந்த அரை ஆடைக்கு  மாறினார். கந்தல் அல்லது கோவணத்துடன் உழலும் கோடிக்கணக்கான இந்திய மக்களுடன் ஒற்றுமை காணவே நான் அரைவேட்டிக்கு மாறினேன் என்றார் காந்தி. முதலில் 1921 செப்.22 -லிருந்து 1921 அக்டோபர் 31 வரை இந்த உடையை அணிவது என்று தீர்மானித்தார் .இதோ அவரின் வார்த்தையில்,என் முழுப்பொறுப்போடு இந்த யோசனையைக் கூறுகிறேன். ஓர் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1921அக்டோபர் 31 வரையாவது தொப்பியையும் பனியனையும் அணியப்போவதில்லை. இடுப்பில் ஒரு துணியும் தேவைப்பட்டால் உடம்பைப் போர்த்திக் கொள்ள ஒரு சால்வையும் மட்டுமே அணியப் போகிறேன். நான் உபதேசம் செய்யத் தயங்கினேன்; என்னால் அப்படி ஒரு உடை அணிய முடியாதபோது நான் உங்களிடம் கேட்டுக்கொள்ளலாமா என்று யோசித்தேன். இப்போது மாற்றத்தை நானே ஏற்றுக்கொண்டு விட்டேன். இந்த உதாரணத்தின் மூலமாக மற்றவர்களும் எளிதாக மாறி அந்நியத் துணிகளை ஒதுக்கிவைத்துவிடலாம்.... மதராஸ் மக்கள் என்னை ஒற்றைத் துணியில் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். ஆனால், இந்தியா என்னை பைத்தியம் என்று அழைத்தால் அதனால் என்ன. என்னுடன் இருப்பவர்கள் என்னைப் பின்பற்றாவிட்டால் என்ன? ஆமாம். இந்த உடை என் கூட இருப்பவர்களுக்காக அல்ல. மக்களை மகிழ்ச்சியடையச் செய்யவும், என் செயலைத் தெளிவுபடுத்தவும் தான். நான் ஒற்றைத் துணியுடன் போகாவிட்டால் பிறரிடம் எப்படி அதை அணியச் சொல்வேன். லட்சக்கணக்காணவர்கள் உடுத்த துணியில்லாமல் இருக்கும்போது நான் என்ன செய்வது? எப்படி இருந்தாலும் முப்பது நாற்பது நாட்களுக்கு முயன்றுபார்த்தால் என்ன? நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன் என்ற திருப்தியை அடைய வேண்டாமா? இதற்கெல்லாம் பிறகுதான் அடி எடுத்து வைத்தேன். இப்போது எனக்கு எளிதாக இருக்கிறது."அன்று தொடங்கி மறையும்வரை, ஏன் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை பெற்றிருந்த பிரிட்டிஷ் மன்னரின் அரண்மனைக்குள்ளே இதே உடையுடன்தான் சென்றார். நவின உலகில் மிக ஆடம்பரமாக உடையணிந்தவர் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த இமல்டோ மார்க்கோஸ். அதிகாரத்தில் இருந்த இந்தியப் பெண்மணிகளில் எளிமையாக உடையணிந்தவர் இந்திராகாந்தி. இந்தியப் பிரதமர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட உடையை ஒருவர் 4 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

 தகவல்- பேராசிரியர் சா. விஸ்வநாதன்- புதுக்கோட்டை.

                                                                               

        


Top