logo
செல்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

செல்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

08/Dec/2020 04:21:15

வாஷிங்டன்: கொரோனா  நோய்த்தொற்று பரிசோதனையை செல்போன் வாயிலாக 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில் நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கு நோய் எதிர்பொருள் (ஆன்டிஜென்) துரித பரிசோதனைக் கருவியும், அந்நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனைக் கருவியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆர்டி பிசிஆர் பரிசோதனைக் கருவியின் மூலம் கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்குக் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

இத்தகைய சூழலில், கிரிஸ்பர் (crisper) தொழில்நுட்பத்தின் வாயிலாக 30 நிமிடங்களுக்குள் கொரோனா  நோய்த்தொற்று பரிசோதனை முடிவை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில், புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருவியில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ- ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட மாதிரியானது செல்லிடப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ள கருவியின் மூலமாகப் பரிசோதனை செய்யப்படும்

அந்த மாதிரியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கேற்ப அதன் ஒளிரும் தன்மையை செல்லிடப்பேசி கேமரா மூலமாகக் கண்டறியலாம். அந்நோய்த்தொற்று பாதிப்பின் தீவிரத்தையும் இந்தக் கருவி மூலமாகக் கண்டறிய முடியும்,  கொரோனா  பாதிப்பு அதிகமாக இருந்தால், மாதிரி  அதிகமாக ஒளிரும். அரை மணி நேரத்துக்குள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

சிஏஎஸ்-13 என்ற  புரதம்  இந்த பரிசோதனைக்கருவியில் பயன்படுத்தப்படுகிறது. இந்தப்புரதமானது கொரோனா வைரஸின் ஆர்என்ஏ மரபணுவைக்கண்டறியும் பணியை மேற்கொள்ளும். இதன் மூலம்  கொரோனா வைரஸ் தொற்றை துரிதமாக கண்டறிய முடியும்.

கிரிஸ்பர் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக 2020-ஆண்டுக்கான வேதியியல் நோபல்  பரிசை வென்ற ஜெனிபர் டூட்னா கூறுகையில், கிரிஸ்பர் தொழில்நுட்பத்தில்  டிஎன்ஏ மரபணுவை ஆர்என்ஏ மரபணுவாக  மாற்றுவதன் மூலமே நோய்த்தொற்று பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.

இதன் காரணமாக கால விரயம் ஏற்படும். ஆனால், கிரிஸ்பரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ஆர்என்ஏ- மரபணுவை நேரடியாகக் கண்டறிவதன் மூலம் துரிதமாக  முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றார்.


Top