logo
பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

03/Dec/2020 08:13:03

சென்னை:பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது என என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அதன் இணைப்பில் இருக்கக்கூடிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பேராசிரியர்களை பணிநியமனம் செய்யும் போது, அசல் சான்றிதழ்களை வாங்கி சரிபார்த்த பின்னர் உடனடியாக அவற்றை ஒப்படைக்க வேண்டும். கல்லூரிகள் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது. அவற்றின் நகல்களை மட்டுமே பத்திரப்படுத்த வேண்டும்.பணி நியமனம், ஊதியம் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்.

பேராசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். மேலும் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதைத் தவிர்க்க யோகா உள்ளிட்டவற்றை முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Top