logo
கே புதுப்பட்டியில் வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை சார்பில்  இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

கே புதுப்பட்டியில் வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

29/Nov/2020 08:32:26

அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே புதுப்பட்டியில் உள்ள சிஎன்சி திருமண மண்டபத்தில் அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளையின் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கவிழா நடைபெற்றது.

 விழாவுக்கு, அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை தலைவர் சிஎன்சி. சிவா தலைமை வகித்தார். துணைத்தலைவர் வீரப்பன் முன்னிலை வைத்தார். விழாவில் 24 மணி நேரமும் செயல் கூடிய  இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொழிலதிபர் கோட்டையூர் பொன். பாஸ்கரன் தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளையின் நிர்வாகி  பொன். துரை  மாணவ மாணவிகள் 60 பேருக்கு  கல்வி உதவித் தொகை ரூ. 2 லட்சம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதையொட்டி, வல்லம்பர் சமுதாய பாடல் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. வெட்டுக்காடு ராஜா  பாடல்களை எழுதி பாடியுள்ளார். இந்த இசைத் தட்டை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம் வெளியிட,  புதுக்கோட்டை தொழிலதிபர் உரக்கடை ரவி பெற்றுக்கொண்டார். 

முன்னதாக, அறக்கட்டளை உறுப்பினர் காசி வரவேற்றார். முடிவில் அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி நன்றி கூறினார். 

விழாவில், திரளான பொதுமக்கள் மாணவ, மாணவியர் பெற்றோர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் வல்லம்பர் சமுதாய 84 நாட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கான  7094779477 -என்ற கைபேசிஎண் அறிமுகப்படுத்தப்பட்டது. 


Top