logo
நிவர் - புயல் அவசர கால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

நிவர் - புயல் அவசர கால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

24/Nov/2020 10:19:11

புதுக்கோட்டை: 

எந்த ஒரு இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 04322-222207. என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவிப்பு.

ராணிப்பேட்டை:

நிவர் - புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், மழை மற்றும் வெள்ள அவசர தேவைகளுக்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறையினை கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 மற்றும் 04172-273166 / 273189 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது மேலும் வாட்ஸ் அப் மூலம் அவசர கால நிலையை தெரிவிக்க 94896 68833 என்ற என் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள கட்டுப்பாட்டு அறை அவசர கால உதவி எண்கள் :  044 - 27427412, 27427414. 

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 24 மணிநேர புயல் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு - கடலூர் மாவட்ட மக்கள் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 04142-220700, 233933, 221383, 221113 ஆகிய எண்களிலும் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு கொள்ளலாம்.


Top